User talk:TI Buhari
Hi, this is my talk page. Share all valuable info here.
பச்சையாக மாற்றுதல் குறித்து
[edit]மதிப்பிற்குரிய ஐயா!
தங்களின் பதிவினைப் பாரத்தேன். எனவே,அதுகுறித்து எனது எண்ணங்களை உங்களிடம் தெரியபடுத்த விரும்புகிறேன். யாதெனில், எழுத்துப்பிழை அற்று முழுமையாக இருக்கிறது என்பதால் மட்டுமே ஒரு பக்கத்தினை பச்சையாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஏனெனில், பிற மொழி ஆவணங்களைப் பார்க்கும் பொழுது எழுத்துரு வடிவமும் அதே போல இருந்தால் தான், பச்சையாக்க வேண்டும் என்பதே நடுநிலையான விதியாகும். எடுத்துக்காட்டாக, //2347. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு// என்பதில் //நினைவு// என்பதில் 'னை' எழுத்துரு. மலையாள விக்கிமூலத்தில் எழுத்துருக்களையும் உருவாக்கி உள்ளனர். எனவே, நாம் இங்கு தமிழை உருவாக்குவோம். உங்களின் பங்களிப்புகளை ஓரிரு பக்கங்களில் எதிர்நோக்குகிறேன். மற்றபடி தமிழ் விக்கிமூலத்தில் நீங்கள் கூறிய பணியை இந்நூல் முடிந்தவுடன் முடிப்பேன். ஆவலுடன்..
- மதிப்பிற்குரிய ஐயா!
தங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஏனெனில், புதிய வடிவிலான னை ணை னா ணா ணோ னோ றா றோ போன்றவற்றை அரசே ஏற்று,(See: TACE16) நடைமுறைப்படுத்திய பின், நாம் பழைய முறையிலேயே அவை அமைய வேண்டும் என்று வலியுறுத்துவது நன்மை பயக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. இப்பழைய எழுத்துருகள் வழக்கொழிந்து, தற்காலத் தலைமுறைக்கே புதுமையாகத் தோன்றுமிடத்து, பிற மொழியாளருக்கு மிகுந்த சிரமத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
இங்கு, ஆங்கில விக்கியில் தமிழ் நூல்களைத் தருவதன் முக்கியக் குறிக்கோள் தமிழ் நூல்களைப் பிற மொழியாளர்களுக்கு அறிமுகம் செய்வதே தவிர, பழந்தமிழை அறிமுகம் செய்வது அன்று என்பதே என் நிலைப்பாடு.
அவ்வாறாயின், அக்காலத்துத் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் கூட்டெழுத்தில் அமைந்திருந்தன. ஓலைச்சுவடிகள் வட்டெழுத்தில் / பிராமி முறையில் அமைந்திருந்தன. அவற்றை அம்முறையிலேயே எழுதினால்தான் பச்சையாக மாற்ற வேண்டும் என்று கூற முடியுமா?
அக்கால ஆங்கிலத்தில் "Long S" என்ற ஒன்று உபயோகத்தில் இருந்தது. வழக்கொழிந்த [ſ ẜ] அது, உபயோகப்படுத்தப்பட்ட புத்தகங்கள் சிலவற்றை நான் ஆங்கில விக்கியில் பார்க்கும்போது, அதற்கான ஒருங்குறி இருந்தும் கூட, தற்கால Sஐயே உபயோகப்படுத்தி இருந்தனர். நீங்கள் சொல்லும் பழங்காலத் தமிழ் எழுத்துக்களுக்கான ஒருங்குறி இல்லாதபோது, அவற்றை எவ்வாறு பயனுறுத்துவது?
- மதிப்பிற்குரிய ஐயா!
இங்கு, நாம் முக்கியமாகக் கருத்தில் நிறுத்த வேண்டியது:
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே" [நன்னூல் சூத்திரம்] என்பதையே...
- என் நோக்கம் பயன்பாட்டுத் தமிழ் குறித்தவை அல்ல. ஒரு நூலைப் பச்சையாக மாற்றி ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல. மஞ்சள் நிலையிலேயே பிழைகளைக் களையலாம். இத்திட்டத்தில் மட்டும் பச்சை அலகு இருப்பதற்கான நோக்கம், அச்சுப்பக்கம் போலவே, தட்டச்சியப் பக்கமும் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. அதனை அனைவரும் பின்பற்றுவராயின் சிறப்பாகும். எழுத்துரு ஆய்விற்க்கு இந்நிறமாற்றம் ஓரளவு உதவும். இல்லையெனில் எந்தெந்த காலக்கட்டத்தில் எந்தெந்த ஆவணங்களில் எழுத்துரு மாறிய வரலாறு புலனாகாது/ காக்கப்படாது. s:ta:பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/3 என்ற பக்கத்தில் அச்சுப்பக்கத்தில் பழைய எழுத்துருக்கள் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அங்கு பச்சையாக்கலாம் என்றே எண்ணுகிறேன். பழைய எழுத்துருக்கள் ஒருங்குறியில் விக்கியில் இல்லை. b:ta:இங்சுகேப்பு பயன்படுத்தும்போது பார்த்திருக்கிறேன். எனவே பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.
- TACE16 எழுத்துரு உருவாக்கியதன் நோக்கம், தற்போதுள்ள ஒருங்குறியிலுள்ள பயன்பாட்டுத் தமிழில், மொழியியல் சார்ந்த கணித்தமிழ் ஆய்வு இடர்களைச் சீர்படுத்துதலே ஆகும். 2013 ஆம் ஆண்டு 'டேசு' குறித்த கட்டுரையை உருவாக்கினோம். இம்முறைமை இல்லாமலே, ஓபன் பைத்தான் நூற்க்கட்டகம் கொண்டு செய்யலாம். எடுத்துக்காட்டாக, 'டேசு' எழுத்துருக்களை ஆய்வு செய்தால் தமிழ் என்பது மூன்று எழுத்து என நிரல் காட்டும். தற்போதுள்ள தமிழ், 5 எனக்கூறும். ஆனால், ஓபன் தமிழ் நூற்கட்டகம் 'டேசு' இல்லாமலே, அச்சொல் 3 என்றே சொல்லும். மூலஆவணத்தை மாற்றுதல் பொருத்தமன்று.உரையாடிமைக்கு நன்றி. Info-farmer (talk) 16:27, 28 October 2021 (UTC)