Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/77

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Dr. C. Balasubramanian 75 42. குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருங்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. --Kuruntokai, 60 43. “வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு அழாஅ லென்று நம் மழுதகண் டுடைப்பார் யாரா குவர்கொல் தோழி. --Kuruntokai, 82:1-3 44. “பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொ டுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே. -Kuruntokai, 57 45. “உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்காடு இன்னா வென்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே. --Kuruntokai, 124 46. “வினையே யாடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவ ருயிரென நமக்குரைத் தோருந் தாமே அழாஅ றோழி யழுங்குவர் செலவே. --Kuruntokai, 135 47. “வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. --Kuruntokai, 18 48. “மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்