Page:Tamil proverbs.pdf/100

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
82
பழமொழி.
  1. ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.
    He eyed the man and deceived him by his talk.

  2. ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.
    One man may stab one, threatening may stab ten.

  3. ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா ?
    Will a sword cut unwielded?

  4. ஆள் இருக்கக் கொலை சாயுமா ?
    Is he who is yet alive, murdered?

  5. ஆள் இல்லாப் படை அம்பலம்.
    Mere weapons are ineffective.

  6. ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
    When a dhony finds her steersman unskilful she pitches.
    Spoken of something going wrong from want of skill.

  7. ஆள் ஏற நீர் ஏறும்.
    As men embark, the surrounding water rises.

  8. ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.
    Though feeble in person, his weapon is powerful.

  9. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
    When numerous fishermen combine together, multitudes of fish may be caught.

  10. ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும்.
    Neither six nor a hundred are required, let that be which will be.

  11. ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீறா விடும்.
    If the sixth-born be a female, a family of overflowing wealth will be reduced to powder.

  12. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
    Death may occur at six, or at a hundred years of age.