Page:Tamil proverbs.pdf/99

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
81
  1. ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
    She who has no husband is like sand in the bed of a river.
    Uncertain as to position.

  2. ஆளான ஆட்களுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காகா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
    The raven demon crying for kanji when the well-to-do cannot obtain a grain of boiled rice.

  3. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
    Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.

  4. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.
    Being buffeted by every one, my head has become as large as a water-pot.

  5. ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.
    He may escape recognition in a crowd.

  6. ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
    After ascertaining the character of the person he undermines his interests.

  7. ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.
    Man must be tested by man and fish by tamarind acid.

  8. ஆளை ஆள் குத்தும் ஆள்மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
    Personal valor enables one to encounter an enemy, but outward show will scare away ten.

  9. ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?
    What, do you take your measure of a person without eyeing him all around?

  10. ஆளைப் பார் முகத்தைப் பார்.
    Look at the person, look at his face.
    Spoken in derision of a boaster.