Page:Tamil proverbs.pdf/114

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
96
பழமொழி.
  1. இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.
    If the giver cease to give, mortal hatred will ensue.

  2. இட்டார்க்கு இடு, செத்தார்க்கு அழு.
    Give to those who have given, weep for the dead.

  3. இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.
    He knows how to eat if food be set before him, and he knows how to carry if the burden be laid upon him.

  4. இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.
    To associate with the obstinate will bring disgrace.

  5. இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா?
    What! is this a town in which water-melons were sold?

  6. இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது?
    When so great a personage takes one by the hand, how can one say nay?

  7. இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?
    If this amouts to that how much will that come to?

  8. இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.
    Such a blow would kill any dog.

  9. இந்த எலும்பைக் கடிப்பானேன் சொந்தப்பல்லுப் போவானேன்?
    Why gnaw this bone, and why lose one’s own teeth?

  10. இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?
    Is it for this gruel that so many sacred namams are used?

  11. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
    What, is it for this gruel that I have made twenty-eight námams sectarial marks?