Page:Tamil proverbs.pdf/122

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
104
பழமொழி.
  1. இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.
    To associate with a double minded woman is fatal.

  2. இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.
    If iron becomes copper, a straw may become a pillar.
    One impossibility is as like as another.

  3. இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?
    Can white-ants eat an iron pillar?

  4. இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.
    If iron can be converted into copper, copper may be reconverted into gold.

  5. இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.
    It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.

  6. இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?
    When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place?

  7. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?
    What has a dog to do in a smith’s shop?

  8. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.
    The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still.

  9. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?
    What will a dog get in a smith’s shop?

  10. இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.
    As if an ant had gnawed an iron pillar.