Page:Tamil proverbs.pdf/126

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
108
பழமொழி.
  1. இல்லோர் இரப்பது இயல்பு.
    It is natural for the destitute to beg.

  2. இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.
    She will make butter out of the butter milk-given for sale, and make provision for the marriage of her first-born son.

  3. இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.
    There are seven points of agreement between this person and that.

  4. இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.
    The advice given to him is like assafœtida dissolved in the sea.

  5. இவன் ஊராருக்குப் பிள்ளை.
    He is the child of the whole village.
    Said of a self-willed wandering youth.

  6. இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.
    He is a clever rogue, what he ties with his feet it is difficult to untie with the hand.

  7. இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.
    He has attained the unattainable; he can show Vaikundam Paradise in the palm of his hand.

  8. இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.
    His wit is as sharp as a wooden pestle.

  9. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
    Will she who attends a funeral remove her marriage symbol?

  10. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
    Harmony sets off a faulty stanza.