Page:Tamil proverbs.pdf/133

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
115
  1. ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடதித்லே ஈ மொய்க்குமா?
    Do insects swarm in a dry place or in a wet place?

  2. ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.
    In an onion there are twenty-eight coats.

  3. ஈரை நினைப்பான், பேரை மறக்கான்.
    He who thinks of a nit will not forget its name.

  4. ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கினேன்.
    I magnified the nit into a louse, and the louse into Perumál.

  5. ஈர் உருவப் பேன் அகப்படுமா?
    Will lice be obtained when drawing nits between the finger and the thumb.

  6. ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.
    That which a bee ejects and that which a dog has stolen.

  7. ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?
    Will a fly that has fallen into the boiled rice go unless it be taken out?

  8. ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.
    To the giver a meal, to the beggar plenty.

  9. ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.
    The press is turned in Lanka, and the material under pressure is examined here.

  10. ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது
    It knows not how to bring forth, nor how to lick.

  11. ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.
    The mother of one's mother is his grand-mother, her mother is his great grand mother.

  12. ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.
    Indulgence in the parent is not good for the child.