Page:Tamil proverbs.pdf/134

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
116
பழமொழி.

உ.

  1. உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?
    Though it should rain to the end of the world, would broken oyster shells vegetate?

  2. உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.
    As a grind-stone fell on the whitlow.

  3. உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.
    It is better to be consumed by a faggot than by your friendship.

  4. உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.
    The eyes will be over-powered by the dancing of your women.

  5. உங்களைக் கடலிலே கைகழுவினேன்.
    I have washed my hands of you in the sea.

  6. உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.
    It is said that when he urged his dog to seize, it replied, you do so.

  7. உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
    If slippered on the head, will the crown of the head become cool?

  8. உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.
    The story of a man who defiled Amman covil by his ulcerated body.

  9. உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.
    As the wearied ass went to the salt-pit.

  10. உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.
    All who have taken a body have taken an alms-dish.

  11. உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?
    Must one not invigorate the body and then proceed to meditation?