Page:Tamil proverbs.pdf/135

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
117
  1. உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
    Thou huggest up in thy bosom the embers that warm every part of the body.

  2. உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?
    Of what consequence is cold to him whose whole body is drenched?

  3. உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது
    Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?

  4. உடல் இரண்டு உயிர் அன்று.
    Divided as regards body, one in soul.

  5. உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.
    The body is born for one, the tongue for many.

  6. உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.
    Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists.

  7. உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.
    The body of one who has no kindred is exposed to desolation.

  8. உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
    A garment not worn is a prey to moths.

  9. உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.
    The cloth one has put on bites as a snake.

  10. உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.
    The guana may go, it is enough if the hand be free.

  11. உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.
    The guana has two tongues, man only one.

  12. உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?
    The guana has a double tongue, has man the same?