Page:Tamil proverbs.pdf/137

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
119
  1. உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
    Garnish the inside of the wall and then the outside.

  2. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
    A mirror reflects whatever is before it.

  3. உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.
    A mere instrument void of feeling and food without salt are alike.

  4. உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
    What, is it to mix poison with the rice one is eating?

  5. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
    There is strength in a body well fed, and grain in the ploughed field.

  6. உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.
    A child that eats well thrives.

  7. உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?
    Is rice required for a full stomach, or oil for a baldhead?

  8. உண்டதுதான் ஏப்பம் வரும்.
    That which has been eaten will be evidenced in the belching.

  9. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா
    May hospitality be requited by treachery?

  10. உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.
    The body nourished by another’s bounty will melt, arecanut when chewed turns red.

  11. உண்ட சுற்றம் உருகும்.
    Friendship cemented by food will compassionate.

  12. உண்டார் மேனி, கண்டால் தெரியும்.
    The body shews who is well fed.

  13. உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?
    Hunger is appeased by eating, will it be so by looking at food?