Page:Tamil proverbs.pdf/139

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
121
  1. உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
    One may wander over the whole country without eating, but one may not go to a single house without dressing.

  2. உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.
    One may go to nine houses without eating, but not to one without garments.

  3. உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
    Mistleloe attached to edible greens.

  4. உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
    Do not go to work without eating.

  5. உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
    The Saiva Brahman will freely eat, the ferocious mendicant will show fight.

  6. உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.
    Though you look at those who are eating, you may not look at those who are ploughing.

  7. உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
    None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.

  8. உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.
    As if the teeth also went out when the lips had gone to beg.

  9. உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?
    Are there any who push into the mouth the plantain that is already between the lips?