Page:Tamil proverbs.pdf/150

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
132
பழமொழி.
  1. உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
    The evil-eyed destroyed even what there was.

  2. உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
    He who speaks the truth is regarded as a wicked person by the country.

  3. உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?
    Is association between an inmate and a thief to be tolerated?

  4. உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.
    Internal distress is known to the inmates.

  5. உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.
    A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought.

  6. உள்ளே கொட்டின தேனே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.
    O thou scorpion thou hast thrust thy sting into me, listen, I will utter an incantation.

  7. உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
    What! is it enmity at heart and friendship on the lips?

  8. உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.
    Bowels burning within, lips shedding ripe fruit.

  9. உறவிலே நஞ்சு கலக்கிறதா?
    What! is poison to be mixed with friendship?

  10. உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?
    What! to feign friendship and to sting as a wasp?

  11. உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.
    No doubt about friendship, but do not put your hand into my basket.

  12. உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.
    Wealth may aid both in friendship and enmity.