Page:Tamil proverbs.pdf/149

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
131
  1. உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.
    He is both an inmate and a thief.

  2. உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.
    I will tie nine knots of hair in the palm of the hand.

  3. உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.
    Like the Nelli berry (Phyllanthus simplex) in the palm of the hand.
    Said of something unmistakably evident.

  4. உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.
    If it be that hair has sprung up in the palm of the hand, a fool may yield to discipline.

  5. உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.
    When an inmate of a house joins the thief, stealing may be carried on till day-break.

  6. உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.
    If the truth be told, the blind woman will be greatly afflicted.

  7. உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.
    It is said that he took to wife a blind girl having given away all he had.

  8. உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
    The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.

  9. உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
    Our inmost thoughts are known to God.

  10. உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.
    When the truth is told, every one takes it ill.