Page:Tamil proverbs.pdf/148

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
130
பழமொழி.
  1. உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.
    A ploughman is unable to keep village accounts.

  2. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
    When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.

  3. உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
    Can a country be destroyed if there be no spy?

  4. உளவு இல்லாமல் களவு இல்லை.
    No spy, no theft.

  5. உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.
    He wanders alone after a pack-bull, through deep mud and incessant rain.

  6. உள்ளீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.
    To be in debt to an inmate and to have the itch in the palm of the hand are intolerable evils.

  7. உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.
    While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.

  8. உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.
    Like putting rice-milk in the palm and licking the back of the hand.

  9. உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
    With what we have we may pretend to have that which we have not.

  10. உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம்.
    It is said that the whole body breaks out into ulcers when the truth is told.

  11. உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
    Sell what you have and buy what is really good.