Page:Tamil proverbs.pdf/174

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
156
பழமொழி.
  1. எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.
    Like infusing acidity into a lemon.

  2. எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.
    Like manuring a lemon tree.

  3. எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?
    Why give pulse to a dog that gnaws bones?

  4. எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?
    Can a dog that gnaws bones bite iron?

  5. எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.
    A boneless tongue may say any thing.

  6. எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.
    No one knows everything, nor is any one ignorant of everything.

  7. எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.
    Everything wanted is in the box, but there is no chatty in which to macerate the vegetable curry.

  8. எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.
    On all heads there are eight letters, on mine there are ten.

  9. எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.
    It is said that the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.

  10. எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.
    It is in the evening that all the mosquitos come.

  11. எல்லாருக்கும் சனி துரும்புபோல, எனக்குச் சனி மலைபோல.
    Saturn who is a mere straw to all other men, to me is as a mountain.