Page:Tamil proverbs.pdf/188

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
170
பழமொழி.
  1. ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்க வேண்டும்.
    Approaching evils should be provided against in due time.

  2. ஏற்றக்கோலுக்குப் பிடித்தால் அரிவாட்பிடிக்கு வரும்.
    If you measure sufficient for a well-bucket pole, it may suffice for the handle of a sickle.

  3. ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?
    Is the song of the picotta responsive?

  4. ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற் சவுக்கிட்டேன்?
    Cake! why so insipid? Because I lack a cash-worth of sugar.

ஐ.

  1. ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.
    He is a broken grain fallen out of five kalams.
    One of a large number of insignificant persons.

  2. ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.
    Though you may go fifty miles, you will not fetch half a cash.

  3. ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.
    Although it may go fifty miles, an agappai will fetch but half a cash.

  4. ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.
    Though one goes fifty miles off, an acquaintance is needed.

  5. ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
    Though he may go fifty miles, his own sin will still cleave to him.

  6. ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
    Though cooked with five ingredients, the wild gourd will not lose its odour.