Page:Tamil proverbs.pdf/190

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
172
பழமொழி.
  1. ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.
    To do a doubtful thing is bad.

  2. ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
    Though reduced to beggary, learn to be wise.

  3. ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .
    Those who are entitled to be called brahmans are holy.

  4. ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?
    Will the new moon await the brahman’s arrival?

  5. ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.
    The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.

  6. ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.
    As the potter perished in the army of Aiyanar.

  7. ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
    The bricks of Aiyanar’s temple are so many gods.

  8. ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
    Those who have trodden the ground of Aiyanar’s temple are so many Pidaris.

  9. ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
    Come, Aiyanar, and accept a goat, a sacrifice.

  10. ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
    No one may dispute the pre-ordination of god.

  11. ஐயோ என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
    The man who expresses commiseration for him will incur six months sin.