Page:Tamil proverbs.pdf/192

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
174
பழமொழி.
  1. ஒதியமரம் தூணாமோ? ஒட்டாங்கிளிஞ்சில் காசாமோ?
    Will an odina tree do for a pillar? will a broken oyster-shell pass as a coin?

  2. ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
    Even an odina tree may prove useful on an emergency.

  3. ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.
    Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.

  4. ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
    Are two swords contained in one sheath?

  5. ஒரு ஊருக்கு ஒரு வழியா?
    Is there but one way to a village?

  6. ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.
    As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.

  7. ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?
    What, to tie two elephants to one pole?

  8. ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு
    To earn one cash is as difficult as to find a horse with horns.

  9. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
    One cash saved is two cash got.

  10. ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
    He who has done a thing once, may do it again.

  11. ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
    Will he who refuses to give a cash, give a pagoda?
    A Pagoda is a gold coin worth about seven shillings.