Page:Tamil proverbs.pdf/201

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
183
  1. ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.
    Better earn one fanam where you are, than nine fanams by running hither and thither.

  2. ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.
    The sole of the foot has become white by constant running.

  3. ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக்கொண்டாள்.
    The husband that ran away has returned and is reconciled, therefore she has adorned herself with jewels to excess.

  4. ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
    He who entertained the man that fled ftom his own village was a Koundan-a man of that tribe.

  5. ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.
    He who is running away, does so singing.

  6. ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
    The hare that ran away was a large one, was it not?

  7. ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
    Though it is obscene, hear it out.

  8. ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
    Having set out to run will it do for him to be behind an old woman?

  9. ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.
    Old enough to seize a running snake.

  10. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
    Seeing him who retreats, makes the efforts of his pursuer easy.

  11. ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
    Will a rolling flood stay at the anicut?