Page:Tamil proverbs.pdf/202

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
184
பழமொழி.
  1. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.
    The chatty may be cracked, what matters that if it bakes the cakes.

  2. ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.
    Like adorning a cracked measure with a metal rim.

  3. ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.
    A cracked pot will hold sugar.

  4. ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?
    Will sugar, because put in a cracked pot, taste bitter?

  5. ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?
    Though the bell may be cracked will it be void of sound?

  6. ஓணான் விழுங்கிய கதைபோல.
    Like the story relating to the swallowing of a bloodsucker.

  7. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
    The unlettered have neither good sense nor virtue.

  8. ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.
    All poets may be found at the entrance of the ploughman’s house.

  9. ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
    Has the poet no country, has the ploughman no land?

  10. ஓதுவார்க்கு உதவு.
    Assist instructors-the brahmans.

  11. ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.
    The blood-sucker draws its prey to a hedge, the frog to water.

  12. ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.
    As if a dog longed for consecrated food.
    Spoken by Síta to Ràvanà.

  13. ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
    Continual rain, and ceaseless wind.