Page:Tamil proverbs.pdf/205

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
187
  1. கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா என்கிறான்.
    If I say, O Varathappa give me some kanji, he replies, O Varathappa where.

  2. கடலிலே ஏற்றம் போட்ட கதை.
    The story relating to a picotta on the sea-side.

  3. கடலில் இட்ட பெருங்காயம்போல.
    Like assafœtida cast into the ocean.

  4. கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.
    A rush may remain in the sea, but a secret will not remain in the mind.

  5. கடலில் கரைத்த புளிபோல.
    Like tamarind acid dissolved in the sea.

  6. கடலைத் தூர்த்தும் காரியம் முடிக்க வேண்டும்.
    You must accomplish your undertaking, though you may have to fill up the ocean.

  7. கடலை தூர்த்தாலும் காரியம் முடியாது.
    Though the sea be filled up, the thing cannot be effected.

  8. கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?
    Should the sea boil, whence water to cool it?

  9. கடல்நீர் நிறைந்து ஆவது என்ன, காஞ்சிரை பழுத்து ஆவது என்ன?
    What benefit arises from the water of the ocean, what good comes from the ripening of the kànjirai, strychnos nux vomica, fruit?

  10. கடல் தாண்ட ஆசை உண்டு, கால்வாய் தாண்டக் கால் இல்லை.
    He wishes to cross the ocean, but has no feet to cross a small drain.

  11. கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.
    As regards the fish of the sea, whatever name the fisherman gives is final.