Page:Tamil proverbs.pdf/207

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
189
  1. கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.
    Debt to the creditor and retaliation to the wrong-doer are due.

  2. கடன்காரனை வைக்கக் கழு உண்டா?
    Is there a stake for impaling debtors?

  3. கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.
    He was as disquieted as the mind of a debtor.

  4. கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.
    Though informed that it is a he-goat, he persists in asking a drop of milk for a medicinal purpose.

  5. கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.
    The drawing back of the he-goat shows that he is about to butt.

  6. கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப் போனவிடம்?
    Does the cowherd know where the ploughshare has passed?

  7. கடாவின் சந்திற் புல்லைத் தின்கிறதுபோல.
    Like eating grass screened behind 2 bull.

  8. கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.
    As the tick was crushed to death when the goats fought.

  9. கடிகோலிலே கட்டின நாய்
    A dog tied to a stick.

  10. கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஒரு ஓலையும் இல்லை.
    She has not even a single bone to pick, nor has she an ear-ornament to polish.

  11. கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?
    Will the cobra be affected by friendly intercourse?

  12. கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.
    A short rope round the neck of a biting dog.