Page:Tamil proverbs.pdf/209

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
191
  1. கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.
    The Vaduga woman's wedding is come nigh.

  2. கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.
    He walks about with a staff in a place that will admit a mustard seed, and yet he is ignorant of the place where a pumpkin might easily pass.

  3. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
    Though small, the mustard seed is not without pungency.

  4. கடுகு போன இடம் ஆராய்வார் பூசனிக்காய் போன இடம் தெரியாது.
    They search for a grain of mustard seed, but not for a missing pumpkin.

  5. கடுகு போன இடம் ஆராய்வார் மிளகு போன இடம் ஆராயார்.
    They search for a grain of mustard seed but not for a grain of pepper.

  6. கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.
    Theft is theft whether as regards a mustard seed or camphor.

  7. கடுக்காய்க்கு அகணி நஞ்சு, சுக்கிற்குப் புறணி நஞ்சு.
    The kernel of the gall-nut and the skin of ginger are poisonous.

  8. கடுங்காற்று மழை காட்டும், கடுஞ்சினேகம் பகை காட்டும்.
    Strong wind foretells rain, excessive friendship foreshows hatred.

  9. கடுஞ்சினேகம் கண்ணுக்குப் பகை.
    Excessive intimacy will prove unfriendly to one’s eyes.

  10. கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.
    It is said that hard dealing fails in its object.

  11. கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.
    Unfair dealing destroys the eyes.