Page:Tamil proverbs.pdf/210

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
192
பழமொழி.
  1. கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.
    It is shocking to the ears to hear harsh words.

  2. கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.
    Peon, my fellow, you are too strict, you have kamboo rice only as wages.

  3. கடும்பசி கல் மதில் உடைத்தும் களவுசெய்யச் சொல்லும்.
    Extreme hunger will induce a man to break through a stone wall and steal.

  4. கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.
    Labouring in menial offices she has not leisure to put up her tresses.

  5. கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.
    Each bazaar will have its attendant.

  6. கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.
    Buttermilk for the last distribution of rice, and a mat for the foot of the bed are indispensable.

  7. கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாற்போல.
    Like taking up a cocoanut in the bazaar and breaking it to Ganésa.

  8. கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.
    He buys in the bazaar, and bestows at home.

  9. கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா, அபிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
    Will the rice in the bazaar serve for kanji, will the paramour of an adulteress be of service to her in distress?

  10. கடையில் வந்ததும் அரிசியோ நடையில் வெந்ததும் சாதமோ?
    Is that which comes to the bazaar rice? Is boiled rice cooked by the way desirable?