Page:Tamil proverbs.pdf/211

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
193
  1. கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.
    Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.

  2. கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.
    Like drinking a decoction of dry ginger after swallowing a crowbar.

  3. கட்டாந்தரை அட்டைபோல.
    Like a wood-louse on dry ground.

  4. கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.
    When told to tie and bring, he cuts and brings.

  5. கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.
    When she embraces and weeps, her hand is groping to steal.

  6. கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.
    She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.

  7. கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.
    If he organize an army and lead it, he may cut down the enemy and reign as a king.

  8. கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன?
    My daughter, why is your hand in the basket while you embrace and weep?

  9. கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?
    It makes no difference whether you flog one bound or unbound.

  10. கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.
    Many will find fault with a house newly built.

  11. கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.
    Many will express an opinion respecting a house just built.