Page:Tamil proverbs.pdf/212

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
194
பழமொழி.
  1. கட்டினவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்குப் பல வீடு.
    He who has built a house has only one, whereas he who has not built makes use of many.

  2. கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?
    On untying a cat and calling puss, puss, will it come?

  3. கட்டிலைத் திருப்பிப்போட்டால் தலைவலி போமா?
    Will head-ache go by turning the bedstead?

  4. கட்டிவைத்த பணத்தைத் தட்டி பறித்தாற்போல.
    As if one displaced and carried away money carefully tied up.

  5. கட்டி விதை வெட்டி விதை.
    Provide seed-corn, and sow having tilled the ground.

  6. கட்டு அறிந்த நாயும் அல்ல, கனம் அறிந்த கப்பரையும் அல்ல.
    He is not a dog accustomed to restraint, nor a mendicant’s dish that knows what self-respect is.

  7. கட்டுக்குக் கட்டு மாறிக் கட்டவேண்டும்.
    Every time you have to tie, you must tie it in a different way.

  8. கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
    When bound, it should be by the hair of the roe, and if cuffed, it should be by a hand ornamented with jewels.

  9. கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.
    It is difficult to carry, besides a child, boiled rice tied up for a journey.

  10. கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?
    Are toe-rings necessary when a woman goes out to g the firewood?

  11. கட்டோடே போனால் கனத்தோட வரலாம்.
    If one sets out auspiciously, he may return with honour.