Page:Tamil proverbs.pdf/213

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
195
  1. கணக்கதிகாரத்தைப் பிறக்கும் கோடாவி.
    He is an axe splitting the tree of arithmetic.

  2. கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.
    The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.

  3. கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.
    Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them.

  4. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
    When accounts are examined, difficulties arise.

  5. கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.
    To suffer hunger is natural to an accountant.

  6. கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது.
    There will be constant disputes in a house should one of its inmates be a skilful accountant.

  7. கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
    A marriage ceremony in the house of an accountant is a waste of oil.

  8. கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.
    All accountants are not learned.

  9. கணபதி பூசை கை மேலே பயன்.
    The pooja of Ganèsa has immediate effect.

  10. கணவனைப் பிரிந்தும் அயல் வீட்டில் இருக்கிறதா?
    What! in a neighbour's house, separated from your husband?

  11. கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.
    If her ankle grow big, she will be deprived of her husband.

  12. கண் கண்டது கை செய்யும்.
    What the eye has seen the hand may do.