Page:Tamil proverbs.pdf/215

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
197
  1. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.
    By learning what he sees, a person becomes a pundit.

  2. கண்டது கேட்டது சொல்லாதே காட்டுமரத்திலே நில்லாதே.
    Never utter what you have seen and heard, nor stand under a wild tree.

  3. கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.
    That which he saw was a snake, but he was bit by the rough points of the palmyra stem.

  4. கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு
    Acquire what you can, and go ashore.

  5. கண்டவன் எடானா?
    Will he who finds, not take up?

  6. கண்டால் தெரியாதா கம்பளியாட்டு மயிர்?
    May not sheep-hair be known as soon as seen?

  7. கண்டால் முறை சொல்லுகிறது காணாவிட்டால் பெயர் சொல்லுகிறதா?
    If present, do you call mentioning the relationship of the party, and when absent, his name only?

  8. கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.
    If seen, duty, if not seen, fraud.

  9. கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.
    If one die under human observation, his corpse will find its way to the place of cremation.

  10. கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.
    I have something to speak of in person, but I am ashamed to look at his face.

  11. கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லையென்று இருக்க வேண்டும்.
    Behave as though seeing, you see not, and hearing, you hear not.