Page:Tamil proverbs.pdf/223

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
205
  1. கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.
    When a child is born in a smith’s family, sugar must be dealt out in the street of the dancing girls.

  2. கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?
    Will the smith’s dog be alarmed at the sound of a hammer?

  3. கயிறு இல்லா பம்பரம்போல.
    Like a top without a string.

  4. கயிற்றைப் பாம்பென்று எண்ணிக் கலங்குகிறது.
    Trembling at a bit of rope thinking it to be a snake.

  5. கரகத்து நீர் காதங் காக்கும்.
    Water in a hand-pot will avail for a katham.

  6. கரடி பிறை கண்டது போல.
    As a bear saw the new moon.

  7. கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.
    Though one be pursued by a bear, he may not escape through weavers’ street.

  8. கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.
    He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.

  9. கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.
    As the bear puts its nose into the anthill, as small bells were tied to the legs of a kite.

  10. கரணம் தப்பினால் மரணம்.
    To fail in a somersault may be fatal.

  11. கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.
    Excessive cording will not diminish the weight of a package.