Page:Tamil proverbs.pdf/222

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
204
பழமொழி.
  1. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
    The ship owner's wife is in good condition as long as the ship is safe, but if that be lost she is a beggar.

  2. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
    The prosperity of the ship-owner is at the mercy of the wind.

  3. கமரிற் கவிழ்ந்த பால் அமரர்க்கு இட்ட அன்னம்.
    Milk poured into a crevice, rice offered to enemies.

  4. கம்பப் பிச்சையோ கடைப் பிச்சையோ?
    Are not alms obtained by pole-dancing the lowest species of alms?

  5. கம்பளியிலே ஏற்றசோற்றை மயிர் மயிர் என்கிறதா?
    Is it to say that the boiled rice received in a cumbly is full of hair?

  6. கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?
    Does hair grow in the money for which cumblies have been sold?

  7. கம்பளியில் ஒட்டின கூழைப்போல.
    Like food sticking to a cumbly.

  8. கம்பளிமேல் பிசின்.
    Gum on a cumbly.

  9. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
    Even the peg to which a cow is tied at Kamban’s house will sing.

  10. கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.
    Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.

  11. கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.
    One must buy a smith’s cow after cropping her ears.