Page:Tamil proverbs.pdf/221

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
203
  1. கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ
    Bawl out as long as you like, and shut the door when you go.

  2. கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்
    When repeatedly urged to bray, even an ass will not do so, when asked to sing, even a poet will refuse.

  3. கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?
    Does the perfumer appreciate the distinction of scents?

  4. கந்தைக்குத் தக்க பொந்தை.
    The hole is in proportion to the rag.

  5. கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.
    The more it is stitched and the stronger does the rag become.

  6. கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.
    Though only a rag; wash it and put it on, and if but kanji, drink it after ablution.

  7. கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.
    Better is a harsh word than one smooth and feigned.

  8. கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.
    Severe head-ache caused the eyes to sink.

  9. கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.
    Like dropping a bit of areca-nut in a ship.

  10. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுக் தீர்க்கவேண்டும்.
    Debt incurred by the sea-faring merchant must be discharged by spinning cotton.

  11. கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமோ?
    Can a debt incurred on account of a sea-faring life be discharged by spinning?