Page:Tamil proverbs.pdf/220

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
202
பழமொழி.
  1. கதைக்குக் காலும் இல்லை தலையும் இல்லை.
    Mere rumours have neither head nor foot.

  2. கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.
    Rumours have no legs, nor have demons feet.

  3. கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.
    O brahman, do you repeat a story or mend old clothes? No, you foolish widow, I crush the lice in my clothes.

  4. கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.
    When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.

  5. கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.
    As if feet and hands shot forth in the brinjal.

  6. கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.
    The seed of a brinjal will not produce gourds.

  7. கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுறா?
    When you buy a brinjal, will the bazaar people give you a pumpkin in at the bargain?

  8. கத்தியும் கடாவும் போலே.
    Like a knife and a he-goat.

  9. கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.
    Great anger is more destructive than the sword.

  10. கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.
    The wife of a swordsman is at any moment liable to becomes widow.

  11. கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?
    Is the elk to be carried to the knife?