Page:Tamil proverbs.pdf/219

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
201
  1. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.
    As one was left in the jungle blindfolded.

  2. கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?
    Will she who would not come when called by the expression of your eyes, obey when taken by the hand?

  3. கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.
    The deity that destroyed the eyes gave a supporting staff.

  4. கண்ணைமூடிக் குட்டுகிறதா?
    Is it to strike the head after covering the eyes?

  5. கண்ணோ புண்ணோ.
    Is it an eye, or a sore?

  6. கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்.
    They who walk with their eyes open will not fall into the pit.

  7. கண்தெரிந்து வழி நடக்கும்படி நினை.
    Take care that you walk with your eyes open.

  8. கண் பார்த்தால் கை செய்யும்.
    If the eye have seen it, the hand may perform it.

  9. கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.
    When the door is shut, the door-frame is outside.

  10. கதிரவன் சிலரைக் காயேன் என்குமா ?
    Will the sun say, I will not burn certain persons?

  11. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.
    Weed the corn even at the risk of destroying the ears.

  12. கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.
    Though the thread on the spindle diminishes, that on the neck of a kalla woman does not.