Page:Tamil proverbs.pdf/218

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
200
பழமொழி.
  1. கண்ணில் கண்டது கோடி காணாதது அனந்தம் கோடி.
    That which was seen was a crore, and that not seen many crores.

  2. கண் உள்ளபோதே காட்சி.
    One has the pleasure of seeing as long as the eyes are unimpaired.

  3. கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.
    The blind will lose his wealth.

  4. கண்ணுக்குப் புருவம் காதாமா ?
    Is the brow ten miles in advance of the eye?

  5. கண்ணுக்குப் புண்ணும் அல்ல, காண்பார்க்கு நோயும் அல்ல.
    It is neither an eye-sore, nor painful to beholders.

  6. கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?
    We do not realize it when the eye and mind are unimpaired; what may we expect to gain afterwards?

  7. கண்ணுக்கு இமை காதாமா ?
    Is the eye-lid far apart from the eye?

  8. கண்ணுக்குட் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.
    She will sit in one's eye cross-legged, and tether five elephants to the pole of a dancer.

  9. கண்ணை இமை காத்ததுபோல்.
    As the eye-lash preserved the eye.

  10. கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.
    The deity that deprived him of sight gave him superior mental endowments.

  11. கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.
    I guarded you as I did my own eyes.