Page:Tamil proverbs.pdf/232

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
214
பழமொழி.
  1. கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?
    Are those who accept a poem and those who reject it alike praiseworthy?

  2. கவிந்திராணம் கஜேந்திராணம் ராஜாவே நிற்பயே வகி.
    O king, manage a poet laureate and a superior elephant without fear.

  3. கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.
    To effect your object, if necessary, cling to the legs of an ass.

  4. கழுதையைக் காணவேண்டினால் குட்டிச் சுவரிலே காணலாம்.
    If an ass be wanted, it may be found feeding near a ruinous wall.

  5. கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.
    If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.

  6. கழுதைக்கு ஏன் கடிவாளம்?
    Why a bridle for an ass?

  7. கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து.
    Dust is medicine for the sores of an ass.

  8. கழுதையும் குதிரையும் சரி ஆமா?
    Are an ass and a horse equal?

  9. கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல .
    Like yoking an ass and a horse together.

  10. கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
    Can an ass appreciate fragrant powder?

  11. கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா?
    Does an ass become a horse by being saddled?

  12. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.
    The ass by wearing away has become an ant.

  13. கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?
    Why a bit or a bridle for an ass?