Page:Tamil proverbs.pdf/249

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
231


  1. காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.
    Having put on ear-rings he walks about shaking them.

  2. காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.
    It should be as if an ear, and an ear, were brought in contact.

  3. காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?
    Will he who cut off the ear strike the eye also?

  4. காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.
    A stranger took possession of the wife of him who was watching her.

  5. காந்தமும் ஊசியும் போல்.
    Like a magnet and needle.

  6. காப்பானுக்குக் கள்ளன் இல்லை.
    He who takes care of his property will not be robbed.

  7. காயம் பட்ட குரங்குபோல்.
    Like a wounded monkey.

  8. காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.
    Like a falling shadow on a sun-striken worm.

  9. காய்த்த மரத்தில் கல் எறிபடும் காயாத மரத்தில் கல் எறிபடுமா?
    Stones are thrown at a fruit bearing tree; are they thrown at that which does not bear?

  10. காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்.
    Stones and other missiles are thrown at a fruit-bearing tree.

  11. காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.
    A fruit-bearing tree bends; the virtuous are lowly.

  12. காய்ந்த மரம் தளிர்க்குமா?
    Will a dry tree bud?