Page:Tamil proverbs.pdf/250

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
232
பழமொழி.


  1. காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.
    Like a starving cow falling in the kambu-millet.

  2. காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.
    Like a hungry tiger falling on a flock of sheep.

  3. காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.
    A lean tiger falls on a cow.

  4. காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
    Is water useless because it is boiled?

  5. காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?
    Rain after drought will not soon cease?

  6. காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.
    It was destroyed by the sun and by the rain.

  7. காராம்பசுவுக்குப் புல்லானால் நந்தவனத்துக்குக் களையுமாம்.
    Grass serves as food for kine, and as an ornament to a flower garden.

  8. காரிகை கற்றுக் கவி சொல்லுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
    It is better to live by beating a drum than by composing verses according to the rules of prosody.

  9. காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.
    The ass grazes in the grounds of the industrious.

  10. காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.
    His eye is on the object, not on the attendant applause.

  11. காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.
    If necessary, secure your purpose by clinging to the feet of an ass.

  12. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
    Which is greater, success or boasting?

  13. கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.
    Wait till the kár paddy is reaped, and the brinjal blossoms.