Page:Tamil proverbs.pdf/271

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
253
  1. குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.
    He tests it by another as a monkey tests an object by the hand of its young.

  2. குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.
    Lay hold of a thing as firmly as a monkey.

  3. குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.
    If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.

  4. குரங்கு எல்லாம் ஒரு முகம்.
    All monkeys have faces alike.

  5. குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.
    Though she be a mere monkey, one should take a wife in one's own tribe.

  6. குரங்கு ஏறாத கொம்பு உண்டா?
    Is there a branch the monkey has not climbed?

  7. குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
    All monkeys go about in troops.

  8. குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.
    The story of a firebrand in the hand of a monkey.

  9. குரு இல்லாத சீஷன் உண்டா?
    Is there a disciple without a Guru-teacher?

  10. குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.
    There is no art without a teacher, and no profit without capital.

  11. குரு என வந்தான் திரு உரை தந்தான்.
    He came as a Guru; he gave sacred instruction.