Page:Tamil proverbs.pdf/270

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
252
பழமொழி.
  1. குயவனுக்குப் பல நாளை வேலை, தடி அடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை.
    That which cost the potter many days labour, is but the labour of a moment to the breaker.

  2. குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.
    Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.

  3. குயில் கூவினாற்போல.
    Like the warbling of the Indian cuckoo.

  4. குயிற் குரலும் மயில் அழகும்போல.
    Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.

  5. குரங்கின் கைப் பூமாலை.
    A garland of flowers in the hand of a monkey.

  6. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணங்குருவி கூண்டு இழந்தது.
    The advice which the pendulous bird Loxia, gave to the monkey ended in the destruction of its own nest.

  7. குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.
    Even to the monkey its own young is precious.

  8. குரங்குப் புண் ஆறாது.
    A sore on a monkey never heals.

  9. குரங்குப் புண் பிரமாண்டம்.
    A sore of the monkey is enormously large.

  10. குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.
    No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a mountaineer.