Page:Tamil proverbs.pdf/269

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
251
  1. குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.
    The rubbish heap has risen, the tower has sunk.

  2. குப்பை உயர்ந்ததென்ன கோபுரம் தாழ்ந்ததென்ன?
    How is it that the rubbish heap has risen, and the tower sunk?

  3. குப்பையும் கோழியும்போலக் குருவும் சீஷனும்.
    The teacher and his disciple are like the dunghill and the fowl.

  4. குமரி ஒரு பிள்ளை கோடி ஒரு வெள்ளை.
    A woman is young till she bears a child, and cloth is new till it is washed.

  5. குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.
    Though a young woman may go on her way alone, yawning is never alone.

  6. குமரியாய் இருக்கையிற் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கிற போது திண்டாட்டம்.
    When young, a woman is full of hilarity, when old her portion is vexation.

  7. கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.
    Neither lend nor borrow beseechingly.

  8. கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.
    When I went to worship the temple fell.

  9. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.
    As the deity one went to worship came to meet one cross wise.

  10. கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.
    The deity I worship is my hereditary deity.

  11. கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.
    Obsequious rogues, deceitful friends.