Page:Tamil proverbs.pdf/268

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
250
பழமொழி.
  1. குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?
    A cuff may be borne, can hunger?

  2. குந்தி இருந்து தின்றால் குன்று மாளும்.
    If you eat properly seated you may consume a heap of rice.

  3. குபேரன் பட்டணத்திலும் விறகு சுமக்கிறவன் உண்டு.
    Even in the city of Kubèran there were firewood carriers.

  4. குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?
    Though the city of Kubèran be despoiled, will the unfortunate obtain even the handle of a wooden spoon?

  5. குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.
    Though they may prostrate themselves and perform penance, religious teachers do not attain heaven.

  6. குப்புற விழுந்தும் மீசையிலே மண் படவில்லை என்கிறான்.
    Though he fell flat on his face, he says that his mustache did not touch the ground.

  7. குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் காலாகுமா?
    Will a plant grown on a dunghill answer for the mast of a ship?

  8. குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல.
    As a creeper springing on a dunghill climbed on a roof.

  9. குப்பையின்றிப் பயிர் விளையாது.
    Without manure the growing grain will not yield a good crop.

  10. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.
    Though it lies on the dunghill the kunrimani-abrus precatorius-remains unchanged.

  11. குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.
    Though the kunrimani be buried in the dunghill its colour will not change.