Page:Tamil proverbs.pdf/267

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
249
  1. குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?
    If it be your good fortune to ride, will not your horse come and place itself under your seat?

  2. குதிரை நல்லதுதான் சுழி கெட்டது.
    It is certainly a good horse, but its circular marks are bad.
    The circlets of hair on a horse are generally observed by dealers and owners very carefully.

  3. குதிரை ஏறி என்ன, கோணக் கொம்பு ஊதி என்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
    What if you do ride a horse, and have a horn blown before you? There is a great distance between the worthless and reputation.

  4. குதிரை பாகனைத் தள்ளுவதும் அல்லாமல் குழியும் தோண்டுகிறதாம்.
    It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.

  5. குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?
    Besides losing the horse, have I to pay three fanams to bury him?

  6. குதிரையும் காதம் கிழவியும் காதம்.
    The horse is ten miles before you, and the old woman is ten miles behind you.

  7. குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.
    You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.

  8. குதிரை இருப்பு அறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
    The horse knows his rider, and a wife her husband.

  9. குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.
    Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish heap it is gold.