Page:Tamil proverbs.pdf/266

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
248
பழமொழி.
  1. குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?
    Can one turn a somersault in an earthen pot?

  2. குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.
    The bandycoote is also like a beetle.

  3. குண்டுணி சொல்லுகிறவனுக்கு இருநாக்கு கட்டுவிரியனுக்கும் இருநாக்கு.
    A slanderer and a snake of deadly poison have each two tongues.

  4. குண்டை பலத்தால் குடி பலக்கும்.
    As kine increase, a household increases.

  5. குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.
    They will all say leap, leap into the pyre, but there is none willing to leap with me.

  6. குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.
    Though she may leap joyously and pound the grain, the slave woman gets but one cake.

  7. குதிரை குருடானாலும் கொள்ளுத் தின்கிறதிற் குறைச்சல் இல்லை.
    Though blind, the horse does not eat the less grain.

  8. குதிரை கொண்டால் கலினத்துக்கு வழக்கா?
    When you have bought the horse, is there any occasion for disputing about its bit?

  9. குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?
    Was it not because the Creator knew the nature of the horse that he did not provide him with horns?

  10. குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.
    Besides the death of the horse there is the saddle also to be carried.

  11. குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
    The horse and the dog like a change of place.