Page:Tamil proverbs.pdf/279

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
261
  1. குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.
    A thoroughly learned man is one of a lac.

  2. குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.
    A water pot not full is agitated, a full pot is not.

  3. குறையச் சொல்லி நிறைய அள.
    Give more than you profess to sell.

  4. குறையுள்ளோர்க்கு உண்டு குறாவுதல் கறையுள்ளோர்க்கு உண்டு கரவு.
    The guilty are dejected, those that have a tarnished reputation elude observation.

  5. குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டல் ஆகாது.
    An unfinished work ought not to be shown even to a Guru-master.

  6. குறை வேலையை அம்பலத்திற் கொண்டுவரலாமா?
    Is it proper to expose an unfinished work for sale or otherwise?

  7. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.
    A guilty conscience is agitated, a foul ear itches.

  8. குற்றம் மறைப்பதில் மற்றொரு குற்றமும் சேரும்.
    By concealing one fault another may arise.

  9. குற்ற மனச்சாட்சி கூடி வாழ் சத்துரு.
    A guilty conscience is an enemy that lives with its possessor.

  10. குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.
    Distinction attained by wrong makes reformation difficult.

  11. குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.
    Undeserved punishment is better than deserved punishment.