Page:Tamil proverbs.pdf/298

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
280
பழமொழி.
  1. கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?
    Do you scratch your head with a firebrand?

  2. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.
    Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.

  3. கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.
    Because burning with a firebrand will produce blisters, you are branding me with a plantain fruit,

  4. கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.
    Great pleasure till attained, great misery afterwards.

  5. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
    Even when going to plunder association is bad.

  6. கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.
    Escape from plunder and pestilence.

  7. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
    The learned are more than kings.

  8. கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.
    The sin arising from killing is expiated by eating the flesh so killed.

கோ.

  1. கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
    The handle of the axe is the enemy of its kind.

  2. கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?
    Are the wealthy and mendicants on a par?