Page:Tamil proverbs.pdf/297

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
279
  1. கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.
    Like a wild jackal showing his teeth.

  2. கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.
    Like encouraging jackals in a field.

  3. கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.
    He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.
    Both are injurious.

  4. கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?
    Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?

  5. கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?
    Are small birds famished because the fields lie waste?

  6. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.
    The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of relationship.

  7. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறவருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.
    The kolukkattai has neither head nor foot, foresters are neither virtuous nor mannerly.

  8. கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
    He who is thin is a mere straw to him who is fat.

  9. கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?
    What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?

  10. கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.
    There are neither buyers nor sellers.