Page:Tamil proverbs.pdf/30

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
12
பழமொழி.
  1. அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
    Even tender creepers when united are strong.

  2. அடா என்பான், வெளியே புறப்படான்.
    He will speak abusively, but will not come out.

  3. அடாது செய்தவர் படாது படுவார்.
    They who do what they ought not, will suffer what they might have avoided.
    It serves him right.

  4. அடி அதிரசம் குத்துக் கொழுக்கட்டை.
    A slap is a cake, a cuff is sweetmeat.
    Spoken of one who is beyond ordinary discipline,

  5. அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா?
    Will an elder or younger brother aid one as effectually as discipline or punishment?

  6. அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.
    The more a ball is struck, the more it rebounds.

  7. அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.
    Beware of a beating wind and of falling rain.
    Beware of things beyond human control.

  8. அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயன்படுமா?
    Does the beating wind fear the sunshine?
    Spoken of irrelevant means to subdue an evil.

  9. அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.
    Winnow while the wind blows.

  10. அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
    One hand smites, the other embraces.
    Discipline regulated by love; used sometimes of Divine chastisements.

  11. அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
    Can one make a somersault in the bottom of a chatti?