Page:Tamil proverbs.pdf/312

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
294
பழமொழி.
  1. சருக்கரையும் மாவும் சரியா?
    Are sugar and flour alike?

  2. சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.
    If bile can be removed by taking sugar, why take bitter medicine.

  3. சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.
    Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.

  4. சல்லிய சாரத்தியம் செய்யாதே.
    Drive not the coach by magic.

  5. சவாதிலே மயிர் வாங்கினதுபோல.
    Like pulling out hair from civet.

  6. சளி பிடித்ததோ சனியன் பிடித்ததோ?
    Are you suffering from catarrh, or has Saturn seized you?

  7. சளுக்கன் தனக்குத் சத்துரு, சவளிக்காரனுக்கு மித்துரு.
    The fop is his own enemy, but a friend of the cloth merchant.

  8. சற்சனர் உறவு சருக்கரைப் பாகு போல.
    The friendship of the good is agreeable as molases of sugar.

  9. சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.
    Men associate with men, camphor and sandal paste blend together.

  10. சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.
    When a man has a strong party he will act with decision.

  11. சனி நீராடு.
    Bathe on Saturdays.
    This proverb is regarded by the people among whom I have lived as equivalent to a command, and is obeyed as such, by observing Saturday as a bathing day.