Page:Tamil proverbs.pdf/311

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
293
  1. சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.
    Abundance and straitness are closely allied.

  2. சம்பளம் அரைப்பணமானாலும் சலுகை இருக்கவேண்டும்.
    Though one’s income is only half a fanam, an air of respectability must be preserved.

  3. சம்பளம் அரைப்பணமானாலும் நம்பினவரைக் காக்கவேண்டும்.
    Though one’s hire is but half a fanam dependents must be protected.

  4. சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.
    Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.

  5. சயினன் கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.
    Like lice in a cloth that had been in the hands of a Jaina mendicant.

  6. சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.
    Bringing forth a child where the required conveniences are found.

  7. சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.
    Like intending to give medicine to her child where conveniences are found.

  8. சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.
    He has only just tine to collect dry leaves; he has not time to warm himself.

  9. சருக்கரை என்றால் தித்திக்குமோ?
    Is the word sugar sweet?

  10. சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.
    A honey-fall in a sugar pandal-an open shed.

  11. சருக்கரையும் மணலும் சரியா?
    Are sugar and sand alike?